ETV Bharat / bharat

லோக்பால் தலைவராக பினாகி சந்திர கோஷ் நியமனம்...அதிகாரங்கள் என்னென்ன? - லோக்பால்

டெல்லி: லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பினாகி சந்திர கோஷ்
author img

By

Published : Mar 20, 2019, 12:00 AM IST

லோக்பால் தலைவர் பினாகி சந்திர கோஷ்

ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட 5 ஆண்டுகளான நிலையில், லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். உடனடியாக லோக்பால் தலைவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சட்ட நிபுணர் மற்றும் மக்களவை சபாநாயகர் அடங்கிய லோக்பால் தேர்வுக் குழு அவரைத் தேர்வு செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

யார் இந்த பினாகி சந்திர கோஷ்?

66 வயதாகும் பினாகி சந்திர கோஷ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி கடந்த மே 2017ல் ஓய்வு பெற்றார். மேலும் கடந்த ஜூன் 2017 முதல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

லோக்பால் உறுப்பினர்கள்

சஹாஷ்டிரா சீமா பால் அமைப்பின் முன்னாள் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், மஹாராஷ்டிரா முன்னாள் தலைமைச் செயலாளர் தினேஷ் குமார் ஜெயின், மஹேந்திர சிங் மற்றும் இந்திரஜித் பிரசாத் ஆகியோர் லோக்பாலின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தலீப் பி போசலே, பிரதீப் குமார் மோகன்டி, அபிலாஷ குமாரி, அஜய் குமார் திர்பாதி ஆகியோர் சட்டத்துறை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

லோக்பால்...அதிகாரங்கள் என்ன?

லோக்பால் அமைப்பு, இன்னாள், முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுத்துறை ஊழியர்கள், 10 லட்ச ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்ஜிஓ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவர் மீதான ஊழல் புகார்களையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்டது. இந்த அமைப்பால் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த விசாரணை அமைப்பிற்கும் ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.

லோக்பால்..தாமதம் ஏன்?

முன்னதாக இந்த தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எதிர்க்கட்சித் தலைவர் பதிவியை ஒரு கட்சி பெற வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சமாக 10 சதவிகித இடங்களை வென்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எந்தக் கட்சிக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைரவரும் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை லோக்பால் தேர்வுக் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்டார். ஆனால், எந்த அதிகாரமும் இல்லாத தேர்வுக் குழுவில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து லோக்பால் கூட்டத்தை தவிர்த்து வந்தார். மேலும், லோக்பால் போன்ற ஊழல் தடுப்பு அமைப்பில் எதிர்க்கட்சிகளின் குரல் மௌனமாக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற காரணங்களால் லோக்பால் அமைப்பின் தலைவர் நியமனம் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்தது.

Intro:Body:

1st Lokpal leader appointed

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.