ETV Bharat / bharat

லோக்பால் முதல் தலைவராக பொறுப்பேற்ற பினாகி சந்திரா!

டெல்லி: ஊழலுக்கு எதிரான அமைப்பான லோக்பாலின் முதல் தலைவராக பினாகி சந்திரா கோஸ் பொறுப்பேற்றார்.

rw
author img

By

Published : Mar 24, 2019, 10:14 AM IST

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் லோக்பால் அமைப்பின் முதல் தலைவராகஉச்ச நீதிமன்றமுன்னாள் நீதிபதி பினாகி சந்திரா கோஸ் மார்ச் 23ஆம் தேதி பொறுப்பேற்றார். எட்டு உறுப்பினர்கள் கொண்ட லோக்பால் அமைப்பில் சட்டத் துறையைச் சேர்ந்த நான்கு பேரும், சட்டத் துறையைச் சாராத நான்கு பேரும் உறுப்பினர்களாக இருக்கலாம் என்பது விதி.

அதன்படி, சட்டத் துறையைச் சார்ந்த நான்கு பேர்உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் மூன்று பேர்:

  1. திலிப் போசலே,
  2. பிரதீப் குமார் மொகந்தி,
  3. அபிலாஷ குமாரி,
  4. சத்தீஸ்கர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் திருப்பதி

சட்டத்துறைச் சாராத உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட நான்கு பேர்:

  1. மகாராஷ்டிர மாநிலத்தின்முன்னாள் தலைமைச் செயலர்தினேஷ் குமார் ஜெயின்,
  2. முன்னாள் ஐ.ஆர்.எஸ்.அலுவலர்மகேந்திரசிங்,
  3. முன்னாள் ஐஏஎஸ்அலுவலர்இந்திரஜித் பிரசாத் கவுதம்,
  4. சஷத்திர சீமா பால் அமைப்பின் முன்னாள் தலைவரான அர்ச்சனா ராமசுந்தரம்

பிரதமர் மோடி தலைமையிலான குழு பரிந்துரைத்த இப்பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பிரதமர் தலைமை வகிக்க, எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கலாம்.

ஆனால் தற்போது காங்கிரஸ் 55 உறுப்பினர்களுக்கு கீழ் மக்களவையில் பெற்றுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவராக யாரும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

முன்னதாகமக்களவையில் காங்கிரஸ் கட்சித்தலைவராக இருக்கும்மல்லிகார்ஜுன கார்கேவுக்குசிறப்பு அழைப்பாளருக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால்கார்கே அழைப்பைஏற்க மறுத்ததால் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களையும் தலைவரையும் தேர்வு செய்தனர்.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து வருடம் அல்லது 70 வயது ஆகும். இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அத்துடன் அவரின் பதவிக்காலம் முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Intro:Body:

https://www.dinamani.com/india/2019/mar/24/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3119870.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.