ETV Bharat / bharat

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விவாகரத்து நடைமுறை கோரி மனு தாக்கல்! - விவாகரத்து

டெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டம், பன்னாட்டு மரபுகளின் அடிப்படையில், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PIL in SC seeks uniform grounds  divorce for all citizens  PIL seeking 'uniform grounds of divorce'  advocate Ashwini Kumar Upadhyay
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விவகாரத்து நடைமுறை கோரும் மனு
author img

By

Published : Aug 17, 2020, 1:42 AM IST

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ’அரசமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம். பாலினம், மதம், சாதி உள்ளிட்டவற்றால் பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால், இந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜைனர்கள் இந்து திருமணச் சட்டம் 1995இன் படியும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தனித்தனி சட்டத்தின் கீழும் விவாகரத்து பெறுகின்றனர். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின், 14, 15, 21 உள்ளிட்ட பிரிவுகளுக்கு முரணாக உள்ள விவாகரத்து சட்டங்களை நீக்கி, குடிமக்கள் அனைவருக்காகவும் ஒரே சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மேலும், விவாகரத்து சட்டங்களை ஆராய சட்ட ஆணையத்தை நீதிமன்றம் அமைக்கலாம். அரசமைப்புச் சட்டம் 14, 15, 21, 44 ஆகியவற்றின் கீழ் பொதுவான விவாகரத்து நடைமுறையை உருவாக்க மூன்றுமாத காலம் அவகாசம் கொடுக்கலாம்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இதையும் படிங்க: பாஜக, ஆர்எஸ்எஸ் கைகளில் பேஸ்புக், வாட்ஸ்அப் - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.