ETV Bharat / bharat

பூலான் தேவி: அதிகாரவர்க்கத்தை நடுங்க வைத்த பெயர்! - ராஜபுத்திரர்கள்

ராஜபுத்திர (தாக்குர்) சமுதாயத்தைச் சேர்ந்த 22 பேரை மண்டியிடச் சொல்லி சுட்டுக் கொல்கிறாள் ஒரு பெண்மணி, இந்தியா முழுவதும் இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவுகிறது. இந்த படுகொலைகளைச் செய்த பெண்மணியின் பெயர் பூலான் தேவி.

phoolan devi
author img

By

Published : Aug 10, 2019, 5:29 PM IST

நான் வன்முறையில் பிறந்தேன்

நான் வன்முறையால் இறப்பேன்;

இதுதான் என் விதி

- பூலான் தேவி

ராஜபுத்திர (தாக்குர்) சமுதாயத்தைச் சேர்ந்த 22 பேரை மண்டியிடச் சொல்லி சுட்டுக் கொல்கிறாள் ஒரு பெண்மணி. இந்தியா முழுவதும் இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவுகிறது. இந்த படுகொலைகளைச் செய்த பெண்மணியின் பெயர் பூலான் தேவி, அவர் பின்னாளில் மிர்சாபூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தன் இல்லத்துக்கு திரும்புகிறார் பூலான் தேவி, அதிரும் துப்பாக்கி சத்தம்...

phoolan devi
எம்.பி. பூலான் தேவி

37 வருடங்களுக்கு முன்பு

1963 ஆகஸ்ட் 10ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கொர்ஹா கா புர்வா எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தின் மல்லா, மூலா தம்பதியருக்கு நான்காவது வாரிசாகப் பிறந்தவர் பூலான் தேவி. பெண் குழந்தையைச் சுமையாகக் கருதும் காலமது, பிற ஒடுக்கப்படும் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் அனுபவிக்கும் துயரங்களை அவரும் அனுபவிக்க வேண்டிய சூழல், பண்ணை அடிமையாக இருந்தது பூலான் தேவியின் குடும்பம்.

11 வயதிலேயே ஒரு இரக்கமற்றவனுக்கு பூலான் தேவியை திருமணம் செய்து வைக்கின்றனர் அவரது குடும்பத்தார். அதனை திருமணம் என்று கூட சொல்ல முடியாது, ஒரு பசு மாட்டை வாங்கிக்கொண்டு பூலான் தேவியை அவரது குடும்பத்தார் விற்றுவிட்டார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். விருப்பமற்ற கணவனால் பலமுறை பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பூலான் தேவி, அவனிடமிருந்து தப்பி ஓடுகிறார்.

கணவனின் கொடுமை தாங்காமல் தப்பி ஓடியவர் ஒரு கொள்ளைக் கூட்டத்தில் இணைகிறார் (அ) ஒரு கொள்ளைக் கூட்டத்தால் கடத்திச் செல்லப்படுகிறார் என இரு தகவல்கள் உள்ளன. அந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் பாபு குஜ்ஜார், பூலான் தேவியை பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகச் சித்ரவதை செய்கிறான். இதனை சகித்துக்கொள்ள முடியாத அதே கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த விக்ரம் மல்லா, பாபு குஜ்ஜாரை கொலை செய்து அந்தக் கூட்டத்தின் தலைவனாக மாறுகிறான்.

phoolan devi
கூட்டாளிகளுடன் பூலான் தேவி

விக்ரம் மல்லாவுக்கும், பூலான் தேவிக்கும் இடையே காதல் மலர்கிறது. பூலான் தேவிக்கு பாதுகாப்பு அரணாக விக்ரம் இருக்கிறார். தனக்கு தொடர் சித்ரவதை அளித்த முன்னாள் கணவனை தேடிப்பிடித்து கொடூரமாக தாக்கிய பூலான் தேவி, இனி சிறுமிகளை யாராவது திருமணம் செய்தால் கொன்றுவிடுவேன் என்ற செய்தியையும் விட்டுச் செல்கிறார். கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருந்ததில், பாபு குஜ்ஜாரை கொலை செய்ததை விக்ரம் மல்லா மறந்து விடுகிறார்.

விக்ரம் மல்லா ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் பாபு குஜ்ஜாரை கொலை செய்தது அதே கும்பலில் உள்ள ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் லால் ராம் ஆகியோருக்கு உறுத்தலாக இருந்தது. பழிவாங்கச் சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது, ராம் சகோதரர்கள் கும்பலுக்கும், விக்ரம் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக பூலான் தேவியும், விக்ரமும் தப்பிவிட்டார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ராம் சகோதரர்கள் தலைமையிலான ராஜபுத்திர கும்பல், இருவரையும் தேடிப்பிடித்து விக்ரமை கொலை செய்துவிட்டு பூலான் தேவியை அடிமையாக இழுத்துச் சென்றது.

பூலான் தேவியை பெஹ்மாய் என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல், அவரை நாட்கணக்காக பாலியல் வன்புணர்வு செய்து கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கியது. ஒரு கட்டத்தில் தன்னைக் கொலை செய்துவிடும்படி பூலான் தேவி மன்றாடுகிறார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் சித்ரவதை செய்து, நிர்வாணமாக ஊர்மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்துகிறார்கள். பின்னர் பூலான் தேவியின் காதலரின் நண்பர்கள் வந்து அவரை மீட்டுச் செல்கிறார்கள். அதில் முக்கிய நபரான மான் சிங், பூலான் தேவியை மிகவும் மதிக்கிறார். அவர் பற்றி பூலான் தேவி, என்னை சதையாகவோ அடிமையாகவோ பார்க்காத முதல் ஆண் மான் சிங்தான் என குறிப்பிடுகிறார்.

பெஹ்மாய் சம்பவத்துக்கு பிறகுதான் மாபெரும் கிளர்ச்சியாளராக உருவெடுக்கிறார் பூலான் தேவி. உயர்சாதி என தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டு மற்ற மக்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கும் கும்பல்களிடம் கொள்ளையடிக்கிறார். கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிதீர்க்க நினைக்கிறார். பாபா என்பவர் உதவியால் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட பூலான் தேவி, தனது காதலனை கொலை செய்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தேடி பெஹ்மாய் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு தன்னை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை அடையாளம் கண்டுகொண்ட அவர், தன் காதலன் கொலைக்கு காரணமான ராம் சகோதரர்கள் எங்கே என விசாரிக்கிறார். தெரியாது என்ற பதிலுக்கு தோட்டாக்களை பரிசாக அளிக்கிறார்.

phoolan devi
பெஹ்மாய் படுகொலைகள்

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. பூலான் தேவியை உயிரோடோ, பிணமாகவோ கொண்டு வருபவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்படுகிறது. இதனிடையே காவல்துறையினர் பூலான் தேவியின் ஆதரவாளர்களைக் கொன்று குவித்தனர். தன்னால் பிறர் வாழ்க்கை நாசமாவதை விரும்பாத பூலான் தேவி, சரணடைய முடிவு செய்கிறார்.

சரணடைய பூலான் தேவி வைத்த கோரிக்கைகள் பின் வருமாறு:

1) என் தந்தையிடம் ஏமாற்றி பிடுங்கப்பட்ட நிலம் திரும்பி வழங்கப்பட வேண்டும்

2) என் கூட்டாளிகள் யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படக் கூடாது, அதேபோல் சிறைத் தண்டனையும் 8 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

phoolan devi
பூலான் தேவி - 1

இதனை ஏற்றுக்கொள்கிறது மாநில அரசு, மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங் முன்னிலையில் பூலான் தேவி சரணடைகிறார். அவருக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உதவும் பழக்கம் உடையவர் பூலான் தேவி. அவருக்கு பெருவாரியான மக்கள் கூட்டம் ஆதரவளித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

phoolan devi
மக்களோடு பூலான் தேவி

பூலான் தேவிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது மாநில அரசு. 1994ஆம் ஆண்டு நிஷாதா சமுதாய மக்கள் தலைவர் விஷம்பர் பிரசாத் நிஷாரின் முயற்சியால் பூலான் தேவி பரோலில் வெளியே வருகிறார். அவர் மீதிருந்த 48 குற்ற வழக்குகளை வாபஸ் பெற்றது அன்றைய முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி அரசு. அதன்பிறகு மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டு 2 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பூலான் தேவி, தான் சொன்னது போலவே வன்முறையால் இறந்தார்.

phoolan devi
பூலான் தேவிக்கு அஞ்சலி

2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தன் இல்லத்துக்கு திரும்பிய பூலான் தேவியை உயர் சாதியினர் சுட்டுக் கொன்றனர்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வாழ்க்கையின் மீது பற்றற்றுப் போகிறவர்கள் மத்தியில், அதிலிருந்து மீண்டு வந்து மக்கள் பிரதிநிதியான பூலான் தேவி, இன்றும் பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறார். அவர் மீது பல கொலை வழக்குகள் இருக்கின்றன. ஆனால் இன்றும் அந்தப் பெயரைக் கேட்டால் அதிகாரவர்க்கம் நடுங்கும். வாழ்நாள் முழுக்க ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுக் குரலாய் ஒலித்தவர் பூலான் தேவி... இன்று அவரது பிறந்தநாள்.

Intro:Body:

Poolan devi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.