ETV Bharat / bharat

8ஆம் கட்ட வந்தே பாரத் திட்டம் டிச. 31ஆம் தேதி வரை நீட்டிப்பு! - ஏர் பபுல்ஸ் ஒப்பந்தம்

கரோனா பரவலால் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகளில் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக 8ஆம் கட்ட வந்தே பாரத் திட்டம் மேலும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vande Bharat Mission
Vande Bharat Mission
author img

By

Published : Dec 4, 2020, 8:29 AM IST

டெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா 8ஆம் கட்ட வந்தே பாரத் திட்டம் டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரவித்துள்ளார்.

தனது வாராந்திர ஊடகச் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “8ஆம் கட்டமாக வந்தே பாரத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 15 நாடுகளிலிருந்து 987 சர்வதேச விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1.5 லட்சம் மக்களைத் திருப்பி அனுப்ப முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், 18 நாடுகளுடன் ஏர் பபுல்ஸ் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது எனக் கூறினார்.

நேற்றைய (டிச. 03) நிலவரப்படி, 34.1 லட்சம் இந்தியர்கள், பணிகளின் வெவ்வேறு முறைகள் காரணமாக திருப்பி அனுப்பட்டனர். எட்டாவது கட்ட வந்தே பாரத் திட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது.

இந்த வந்தே பாரத் திட்டம் கரோனா பெருந்தொற்று நோய்ப்பரவல் காரணமாக ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்பதற்காக கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க: ரூ.22 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 வெளிநாட்டவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.