கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு தழுவிய பொருளாதார முடக்கம் நிலவிவருகிறது. இதனால், மக்கள் கைகளில் பணமின்றி தவித்துவருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த 16 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் 30 காசுகளும், டீசல் 9 ரூபாய் 46 காசுகளும் உயர்வை சந்தித்துள்ளன.
அந்த வகையில், தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.23லிருந்து ரூ.79.56 ஆகவும், டீசல் விலை ரூ.78.27லிருந்து ரூ.78.55 காசுகளாகவும் விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து மாற்றியமைக்கப்பட்டது. அதனடிப்படையில் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு!