கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் மிக வேகமாகவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருவர்களும் அவர்களது குடும்பத்தினரும் 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் இந்த கோவிட்-19 வைரஸ் ஒருவரது உடலில் 14 நாள்கள் வரை எவ்வித அறிகுறிகளுமின்றி இருக்கும்.
இருப்பினும் தனிமையில் இருக்க வேண்டிய பலரும் அரசின் அறிவுறுத்தல்களை புறம் தள்ளி வீட்டிலிருந்து வெளியேறி வீதிகளில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் வைரஸ் தொற்று மிக எளிதில் மற்றவர்களுக்கு பரவும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுதான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபியை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால், அவர்கள் அரசின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று கர்நாடக மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
தூங்கு நேரமான இரவு 10 முதல் காலை 7 மணி வரை மட்டும் செல்ஃபி அனுப்ப விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று - கட்டுக்கதைகள் vs உண்மைகள்