ETV Bharat / bharat

நிரந்தரமாக மூடப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் - AFT

புதுச்சேரி: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் (AFT) என்கிற ரோடியர் மில் வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/28-January-2020/5866167_pud.mp4

author img

By

Published : Jan 28, 2020, 9:48 AM IST

Updated : Jan 28, 2020, 12:57 PM IST

கி.பி 1800ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ், புதுச்சேரி இருந்தபோதும் ஆங்கிலேயர்களும் இங்கு வசித்து வந்தனர். கி.பி 1898 ஆம் ஆண்டு லண்டனை தலைமையகமாகக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் ரோடியர் மில் 26 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இந்த மில்லை ரொதியர் என்ற பிரெஞ்சுக்காரர் தொடங்கியதால், நாளடைவில் அந்தப் பெயர் மருவி 'ரோடியர்' என்று பெயர் பெற்றது. ஸ்பின்னிங், காட்டன் துணி நெய்தல், செயற்கை இழை தயாரிப்பு, சாயம் தோய்த்தல், சலவை போன்ற அனைத்துப் பணிகளும் இங்கேயே நடந்தன. தொடக்கத்தில் இங்கு உற்பத்தியான துணிகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மூலப்பொருட்களைக் கொண்டுவரவும், உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லவும் வசதியாக 1899ஆம் ஆண்டு மில்லுக்குள் ரயில் பாதை அமைக்கப்பட்டது. துணிகள் தயாரிப்பதற்கான கச்சாப் பொருட்கள் இந்திய, அமெரிக்க பகுதிகளில் இருந்து பெறப்பட்டன.

1924ஆம் ஆண்டு இந்த மில் 'ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ்' என்று அழைக்கப்பட்டது. இதற்கிடையே 11.26 ஏக்கரில் பி யூனிட்டு தற்போது முதலியார் பேட்டையில் உள்ளது.1975-76ஆம் ஆண்டில் 13.74 ஏக்கரில் அய்யங்குட்டிபாளையத்தில் சி யூனிட்டும் (கேன்வாஸ் மில்) தொடங்கப்பட்டது.

புதுச்சேரி சுதந்திரம் பெற்றதையடுத்து பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த ஜி.என்.ஜாட்டி என்ற தொழிலதிபர் மில்லை விலைக்கு வாங்கி நடத்தினார். அவரது நிர்வாகத்துக்கு வந்த பின் மில்லில் நிர்வாகச் சீர்கேடு தலைவிரித்தாடியது. தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக 1983ஆம் ஆண்டு மில் மூடப்பட்டது. அந்த காலகட்டத்தில் ரோடியர் மில்லில் சுமார் 7,600 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மில்லை திறக்கக்கோரி போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் 1984ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக ராஜிவ் காந்தி புதுச்சேரி வந்தார். உப்பளம் இந்திராகாந்தி திடலில் பேசிய அவர் மில்லை திறப்போம் என்று வாக்குறுதி அளித்தார். தேர்தல் முடிந்த பின் 24.12.1985ஆம் ஆண்டில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து மில்லை, தனியாரிடம் இருந்து கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைத்தது. அதன்பின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10.6.1986ஆம் ஆண்டில் மில் இயங்கத் தொடங்கியது.

மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பி.எம். நாயர் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். மில்லில் ராணுவத்துக்குத் தேவையான சீருடைகள், பாராசூட் துணிகள் என 93 ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் மில் லாபகரமாக இயங்கியது. இதன்பின்பு கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தானே புயல் தாக்கியது. இதில் மில் கடுமையான சேதத்தை சந்தித்ததால் மூடப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மில் நஷ்டத்தில் இயங்கியதால் விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்பட்டது. நிதிநிலை காரணமாக கடந்த 5.11.2013ஆம் ஆண்டு அன்று தொழிலாளர்கள் தற்காலிக வேலை நிறுத்தம் செய்தனர்.

ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ்

இந்தநிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முதல் மில்லை மூட அதன் மேலாண்மை இயக்குநரான பிரியதர்ஷினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான கடிதம் தொழிலாளர் துறை செயலாளருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகிற 30.4.2020ஆம் ஆண்டு முதல் மில் மூடப்படுவதாக உள்ளது. மில் மூடப்படுவதால் தற்போது வேலை செய்து வரும் 619 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். ஏழு ஆண்டுகளில் சுமார் ரூ.700 கோடி வழங்கியும் மில் நஷ்டத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மில் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மில்லைத் தொடர்ந்து இயக்க வாய்ப்பு இல்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மில் நிர்வாகமும் அன்றாடச் செலவுகளுக்கு அரசின் உதவியையே எதிர்நோக்கி உள்ளது. கடுமையான நஷ்டம் மற்றும் அரசினால் நிதி வழங்க முடியாத நிலை இருப்பதால் மில்லை மூட முடிவு செய்திருப்பதாக அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: கடப்பாரையுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Intro:புதுச்சேரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த AFT என்கிற ரோடியர் மில் வரும் ஏப்ரல் மாதம் 30 ம் தேதிமுதல் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.Body:புதுச்சேரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த AFT என்கிற ரோடியர் மில் வரும் ஏப்ரல் மாதம் 30 ம் தேதிமுதல் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

1800-ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின்கீழ் புதுச்சேரி இருந்தபோதும் ஆங்கிலேயர்களும் இங்கு வசித்து வந்தனர். 1898-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாக கொண்ட ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் ரோடியர் மில் 26 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இந்த மில்லை ரொதியர் என்ற பிரெஞ்சுக்காரர் தொடங்கியதால், நாளடைவில் அந்த பெயர் மருவி ரோடியர் என்று பெயர்பெற்றது. ஸ்பின்னிங், காட்டன் துணி நெய்தல், செயற்கை இழை தயாரிப்பு, சாயம் தோய்த்தல், சலவை போன்ற அனைத்து பணிகளும் இங்கேயே நடந்தன. தொடக்கத்தில் இங்கு உற்பத்தியான துணிகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மூலப்பொருட்களை கொண்டுவரவும், உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லவும் வசதியாக 1899-ம் ஆண்டு மில்லுக்குள் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.துணிகள் தயாரிப்பதற்கான கச்சா பொருட்கள் இந்திய பகுதிகளில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பெறப்பட்டன. 1924-ம் ஆண்டு இந்த மில் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் என்று அழைக்கப்பட்டது. இதற்கிடையே 11.26 ஏக்கரில் பி யூனிட்டும் , தற்போது முதலியார் பேட்டையில் உள்ளது.1975-76ல் 13.74 ஏக்கரில் அய்யங்குட்டிபாளையத்தில் சி யூனிட்டும் (கேன்வாஸ் மில்) தொடங்கப்பட்டது.

புதுச்சேரி சுதந்திரம் பெற்றதையடுத்து பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேற தொடங்கினார்கள்.1980-ம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையை சேர்ந்த ஜி.என்.ஜாட்டி என்ற தொழிலதிபர் மில்லை விலைக்கு வாங்கி நடத்தினார். அவரது நிர்வாகத்துக்கு வந்த பின் மில்லில் நிர்வாக சீர்கேடு தலைவிரித்தாடியது. தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக 1983-ம் ஆண்டு மில் மூடப்பட்டது. அந்த காலகட்டத்தில் ரோடியர் மில்லில் சுமார் 7,600 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மில்லை திறக்கக்கோரி போராட்டங்கள் வெடித்தன. இந்தநிலையில் 1984 ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக ராஜீவ்காந்தி புதுச்சேரி வந்தார். உப்பளம் இந்திராகாந்தி திடலில் பேசிய அவர் மில்லை திறப்போம் என்று வாக்குறுதி அளித்தார். தேர்தல் முடிந்த பின் 24.12.1985ல் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து மில்லை தனியாரிடம் இருந்து கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைத்தது. அதன்பின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10.6.1986-ல் மில் இயங்க தொடங்கியது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான பி.எம். நாயர் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். மில்லில் ராணுவத்துக்கு தேவையான சீருடைகள், பாராசூட் துணிகள் என 93 ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் மில் லாபகரமாக இயங்கியது. இதன்பின்பு கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி தானே புயல் தாக்கியது. இதில் மில் கடுமையான சேதத்தை சந்தித்தது. இதைத்தொடர்ந்து மில் மூடப்பட்டது. தொடர்ந்து மில் நஷ்டத்தில் இயங்கியதில் விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்பட்டது. நிதிநிலையை காரணம் காட்டி 5.11.2013 அன்று தொழிலாளர்களுக்கு லே-ஆப் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் மில்லை வருகிற ஏப்ரல் மாதம் 30-ந்தேதி முதல் மூட மில்லின் மேலாண் இயக்குனரான பிரியதர்ஷிணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான கடிதம் தொழிலாளர்துறை செயலாளருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வருகிற 30.4.2020 முதல் மில் மூடப்படுவதாக கூறியுள்ளார். மில் மூடப்படுவதால் தற்போது வேலை செய்து வரும் 619 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். 7 ஆண்டுகளில் சுமார் ரூ.700 கோடி வழங்கியும் மில் நஷ்டத்தில் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மில் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மில்லை தொடர்ந்து இயக்க வாய்ப்பு இல்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.மில் நிர்வாகமும் அன்றாட செலவுக்கு அரசின் உதவியையே எதிர்நோக்கி உள்ளது. கடுமையான நஷ்டம் மற்றும் அரசினால் நிதி வழங்க முடியாத நிலை இருப்பதால் மில்லை மூட முடிவு செய்திருப்பதாக அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

Visual file shotConclusion:புதுச்சேரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த AFT என்கிற ரோடியர் மில் வரும் ஏப்ரல் மாதம் 30 ம் தேதிமுதல் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
Last Updated : Jan 28, 2020, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.