ETV Bharat / bharat

'பெரியார் வாழ்க!' என்ற கனிமொழி - 'ஜெய்ஸ்ரீராம்' என கோஷமிட்ட பாஜக எம்.பி.க்கள்

டெல்லி: 'பெரியார் வாழ்க' என திமுக எம்.பி. கனிமொழி முழக்கமிட்டதற்கு பாஜக எம்.பி.க்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என கூச்சலிட்டதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.

கனிமொழி
author img

By

Published : Jun 18, 2019, 3:07 PM IST

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலாவதாக பிரதமர் மோடி வராணாசி எம்பியாகவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

குறிப்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது பதவியேற்பின்போது மக்களவையின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பெற்ற 'கனிமொழி கருணாநிதி' என்னும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பில் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டினையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவுள்ள கடமை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன். 'வாழ்க தமிழ்!', 'பெரியார் வாழ்க!' என முழக்கமிட்டார். இதற்கு போட்டியாக அவையில் கூடியிருந்த பாஜக எம்.பி.க்கள் 'ஜெய்ஸ்ரீராம்' எனக் கூச்சலிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நீடித்தது.

Intro:Body:

வாழ்க பெரியார் என்ற கனிமொழி.. ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட பாஜக எம்பிக்கள் Kanimozhi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.