ETV Bharat / bharat

மக்களின் பேராதரவுடன் மீண்டும் ஒளிபரப்பாகிய ராமாயணம்! - Lock down

பிரபலமான ராமாயணம் தொடர் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

People
People welcome government's decision to retelecast Ramayana
author img

By

Published : Mar 29, 2020, 11:37 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைகளைத் தவிர வேறு எதுக்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் செய்வதியறியாது திகைத்து வரும் மக்கள் சிலர் பழைய பாடல்கள், விரும்பிய திரைப்படங்களை பார்த்துக்கொண்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலே சென்று மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள டைல்ஸ் எண்ணிக்கை எண்ணுவது, மேரி கோல்டு பிஸ்கெட்டில் எத்தனை துவாரங்கள் உள்ளது என்று எண்ணுவது போன்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதனை பெருமையாக வேறு சமூக வலைதளங்களில் பதிவாக போடுகிறார்கள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட விரும்பாத மக்கள் சிலர் பழங்கால சீரியலான ராமாயணத்தை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினர். இதனை ஏற்று தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு முறையும் பின்னர் இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

அதன்படி நேற்று முதல் ராமாயணம் தொடர் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில்," மக்கள் வீட்டிலேயே இருக்கும் இந்த தருணத்தில் ராமாயணம் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ராமாயணத்தை மறுஒளிபரப்பு செய்ய முடிவெடுத்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஒரு பிரபலமான தொடரை இன்று குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய இதிகாசத்தை இன்றைய குழந்தைகளும் அறிந்து கொள்வதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.

ராமாயணம் தொடரைத் தொடர்ந்து மகாபாரதம் தொடரும் நண்பகல் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது' - ராமாயணம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட காஜல் அகர்வால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.