கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிகள் மீறப்பட்டுள்ளன.
இதனிடையே, கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள சிவலிங்கேஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 8ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் கலந்து கொண்டு ஊரடங்கு விதிகளை மீறினர். விதிகளை மீறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதேபோன்ற தேரோட்ட நிகழ்ச்சி ரவூர் கிராமத்தில் நடைபெற்றது. ஊரடங்கு விதிகளை மீறி இதில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தியாவில் வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக கல்புர்கி உள்ளது. கரோனா தொற்று காரணமாக நாட்டின் முதல் உயிரிழப்பு சம்பவம் இங்குதான் நிகழ்ந்தது.
இதையும் படிங்க: கரோனா பீதி: இறந்தவரின் உடலை எடுக்க மறுத்த கிராம மக்கள்