கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையானது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் தீவிரமான முறையில் கடைபிடிக்கப்படுகிறது. மிக நீண்டகால லாக்டவுன் நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை மாநில அரசுகள் அனைத்தும் முழுமையாக வரவேற்று ஒத்துழைப்பு வழங்கிவருகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் எவ்வாறு பிரதிபலித்துள்ளது என ஐஏஎன்எஸ் - சிவோட்டர் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில் 93.6 விழுக்காடு மக்கள் பிரதமர் மோடி கரோனாவை எதிர்கொள்ளும் விதமும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். வெறும் 4.7 விழுக்காடு மக்களே இந்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 393ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 681ஆக உள்ளது.
இதையும் படிங்க: 'ஊரடங்கு தளர்வுக்குப்பின் எவ்வாறு கையாள வேண்டும் என்பது அரசுக்குத் தெரியவில்லை'