2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்குப் பின், தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்தங்கள் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது ஜம்மு காஷ்மீர் குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
முன்தைய விதிகள்படி மேற்கு பாகிஸ்தான், வால்மிகி பிரிவு மக்கள், காஷ்மீர் குடியேற்ற தொழிலாளர்கள், காஷ்மீர் சமூகத்தைச் சாராதவர்களை திருமணம் செய்துகொண்ட பெண்கள் ஆகியோருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வந்தது. இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, மேற்கண்டவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: தொழில்துறை நிறுவனங்கள் எப்போது செயல்படலாம்? டெல்லி அரசு விளக்கம்...!