டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். இந்நிலையில், டெல்லித் தேர்தலில் தோல்வியுற்றதற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் டெல்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், 'ராஜினாமா செய்யக்கூறி எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பினேன். ஆனால், டெல்லித் தேர்தல் வரையில் பதவியிலிருந்து பணியாற்றுமாறு கட்சித் தலைமை கூறியிருந்தது.
அதன்படி பணியாற்றினேன். தற்போது, எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளரிடம் கொடுத்துள்ளேன். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஆனால், தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி ஆய்வு செய்யட்டும்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சரிவு, ஷீலா தீக்ஷித் 2013ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோதே ஆரம்பித்து விட்டது" என்றார். ஏற்கெனவே டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிரகாஷ் சோப்ரோ தனது ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பி.சி. சாக்கோவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் நீட்சியாக, அவரது கடிதத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.
இதையும் படிங்க: முன்பைவிட அதிக தொகுதிகளில் வெற்றி - ஷாம் ஜாஜு