டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முக்கியமான செயலியாக இருக்கும் பேடிஎம், தனது ஊழியர்களுக்கு, பணியாளர் பங்கு உரிமை திட்டம் வழியாக 250 கோடி அளவில் ஊதிய உயர்வினை, லாபத்திற்கேற்ற வகையில் வழங்கவுள்ளதாக தெரிவித்தது.
அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் நடைமுறைக்கு வரும் இத்திட்டமானது, நிறுவன முன்னேற்றத்தில் அதிக பங்காற்றியவர்களுக்கும், புதிய ஊழியர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும். எந்தெந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுமென்பது இன்னும் வெளியாகவில்லை. இதற்கான, மதிப்பீடுகள் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பின்படி, செயல்திறனை அதிகப்படுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னரும், திறனை மேம்படுத்தாத ஊழியர்களுக்கு பணி விலகல் குறித்து தெரிவிக்கப்படும். தொழில்நுட்ப குழுக்களில் பணியாற்றுவதற்காக, 500 பேரை புதிதாக வேலையில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் பங்குகளைக் கொண்ட ஊழியர்களை ஊக்கப்படுத்தவும், நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிகமான பங்குதாரர்கள் பங்கேற்கவும் உதவியாகயிருக்கும் என பேடிஎம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
"பேடிஎம் நிறுவனம், ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இதனால், நிறுவனத்தில் போதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதையும், மேம்படுத்துவதற்கான பரிந்துரைககளை பெற்றுக் கொள்வதையும் உறுதி செய்யமுடிகிறது” என்கிறார் பேடிஎம் சி.எச்.ஆர்.ஓ ரோஹித் தாகூர்.
இதையும் படிங்க: தொழிலாளர் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசின் புதிய நடவடிக்கை