டெல்லி: அரசு ஊரடங்கை தளர்த்தும்போது பயனர்களுக்கு மேம்பட்ட சேவை அளிப்பதை உறுதிசெய்ய தனது ஊழியர்களிடன் தங்களுக்கான சில விடுமுறைகளை தியாகம் செய்ய பேடிஎம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய விதிகளின் கீழ், ஊழியர்கள் ஆண்டுக்கு 35 நாட்கள் என தங்களுக்கென சிறப்புரிமை விடுப்பு (பி.எல்) மற்றும் சேர்த்து வைத்துள்ள சாதாரண விடுப்புகளை (சி.எல்) நிறுவனத்துக்கு பங்களிக்க முடியும்.
இந்த நடவடிக்கையானது தற்போதைய நிலையில், நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும் என பேடிஎம்-இன் தலைமை மனிதவள மேம்பாட்டு அலுவலர் ரோகித் தாகுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.