டெல்லியில் நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படாமல் பல நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாகவே காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்து வந்தார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான ஷீலா தீட்சித் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையேயான கூட்டணியை தவிர்த்து வந்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படுவதற்கு உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, ஆந்திரப்பிரதேசம் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி ஆகியோரை தொடரந்து தற்பொது சரத் பவார் உதவி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா, பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.