இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் இல்லை என்றபோதிலும், இந்த வைரஸானது அசுரவேகத்தில் பரவக்கூடியத் தன்மையுடையது.
இதன்காரணமாக, கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதோடு, அவருடன் தொடர்பில் இருந்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்களா என்று சோதனை செய்வதே, இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிந்து, கட்டுப்படுத்த ஒரே வழியாகும்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு உமேஷ் பிரசாத் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். லாலுவிற்கு சிகிச்சையளிக்கும் அதே பிரிவின் கீழ் இருந்த மற்றொரு நோயாளிக்கும் மருத்துவர் உமேஷ் பிரசாத் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவர் உமேஷ் பிரசாத்தின் கீழ், சிகிச்சைப் பெற்று வந்த அந்த நோயாளிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 70 முதல் 80 விழுக்காடினருக்கு வைரஸ் அறிகுறி தெரியவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளது.
இதனால், லாலு பிரசாத் யாதவிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் அவருடைய கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதையும் பார்க்க: போடோலாந்து குழுவின் தலைவரானார் அசாம் ஆளுநர்