மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த அவர், கழிப்பறை ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியேறி, மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தற்கொலை முயற்சிக்கு பின்னர், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை விரைந்துள்ள காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: மீண்டும் நீராவி இன்ஜின் சத்தம்: இது 165 ஆண்டுகளின் புதுமை!