இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்கள் ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்த நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதி விமானத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு தங்குமிடம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
பயணித் தேதி
டிசம்பர் 22 ஆம் தேதி விமானத்தை முன்பதிவு செய்த பயணிகள் அனைவரையும் தொடர்பு கொண்டு, அவர்கள் முன்பதிவு செய்த விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டன. விமான போக்குவரத்துறை அமைச்சர் அறிவிப்புக்குப் பிறகு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் பயணிகளுக்கு மறுவரிசைப்படுத்தப்பட்ட பயணத் தேதி அனுப்பட்டன.
தங்குமிடம்
டிசம்பர் 23 ஆம் தேதி விமானத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு தங்குமிடம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்கள் 2021 ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 23 ஆம் தேதி வரை இரு நாடுகளின் விமானங்களும் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு தலா 15 விமானங்கள் இயக்கப்படும்.
இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு தடை
டிசம்பர் 30 ஆம் தேதி, இங்கிலாந்திலிருந்து வரும், விமானங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஜனவரி 7 வரை நீட்டிக்க விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 22 ஆம் முதல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு அரசு தடை விதித்தது.
சரக்கு விமானங்களுக்கு கட்டுப்பாடு
இதைத் தொடர்ந்து, ஜனவரி 31 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச விமானங்களை நிறுத்தி வைக்க மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும், சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு விமானங்கள், சர்வதேச சரக்கு விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது.
இதையும் படிங்க: வரும் 8ஆம் தேதி முதல் மீண்டும் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கம்!