கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு கடந்த வாரம் பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி கர்நாடகாவில் பசுக்களை உணவு உள்ளிட்ட எந்தக் காரணத்திற்காக கொன்றாலும், அது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.
இச்சட்டத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, அவரது அமைச்சரவைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து மத முறைப்படி பசுக்கள் தாய்போல வணங்கப்படுகின்றன. இதை நாம் வெறும் ஒரு உயிரினமாக மட்டும் கருதவில்லை. இந்தச் சட்டம் எந்தவொரு மதத்திற்கு சாதிக்கும் எதிரானது அல்ல. இது நம் நாட்டையே உயர்த்திப் பிடிக்கும் ஒரு சட்டம். நாம் மகாவீர், புத்தர், காந்தி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ‘மம்தா ஆசிர்வாதத்துடன் அரங்கேறும் அராஜகம்’ - ஜெ.பி. நட்டா