குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்ய நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. மக்களவையின் துணை சட்டக் குழுவிடம் இந்த அறிக்கையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு ஆறு மாத காலம் நிறைவடைந்த நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறை ஆறு மாத காலத்திற்குள் வகுக்கப்பட வேண்டும். கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக நாடாளுமன்ற பணிகள் முடங்கியுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரோஹிங்கியா, ஆப்கான் இஸ்லாமிய அகதிகள் சிலர் குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவருவதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க காவல்துறை ஆளும்கட்சியின் ஏவல்துறையாக செயல்படுகிறதா?