நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மே 30ஆம் தேதி மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று டெல்லியில் கூடுகிறது. இன்று தொடங்கும் கூட்டத் தொடரானது ஜூலை 26 வரை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து முதல் இரண்டு நாட்களில் தேர்தலில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இதையடுத்து, ஜூன் 19ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
இதையடுத்து ஜூலை 5ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த முதல் பட்ஜெட் தாக்கலில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.