ETV Bharat / bharat

3 முக்கிய தொழிலாளர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் - எட்டு உறுப்பினர்கள் இடைநீக்கம்

தொழிலாளர் சீர்திருத்தம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டன.

Parliament
Parliament
author img

By

Published : Sep 23, 2020, 7:18 PM IST

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவார் மூன்று முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்தார். நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க வெளிப்படையான சட்டவழிகளை மேற்கொள்ளவே இந்த மசோதாக்கள் இயற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மூன்று தொழிலாளர் மசோதாக்கள்:

  • தொழிலாளர்களின் தங்குமிட பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, அவர்களின் பணியிட சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மசோதா
  • நாட்டில் உள்ள 40 கோடி அமைப்பு சார தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதா
  • வர்த்தக சங்கங்கள், தொழிற்சாலைகள் சார்ந்த பல்வேறு சட்டங்களை தொகுக்கப்பட்டு 29 சட்டங்கள் நான்காக இணைக்கப்பட்டுள்ளது

இந்த மசோதா மூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை மூடவோ, தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யவோ அரசின் அனுமதி பெறத் தேவையில்லை.

முக்கிய சீர்திருத்தமாகக் கருதப்படும் இந்த மூன்று மசோதாக்கள் நிறைவேற்றத்தின் போது நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லை. எட்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இல்லாமலே இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சந்தை நிலவரம்: 5ஆவது நாளாக தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.