ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் அதனை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல் (பரிக்ஷா பே சார்ச்சா) நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கோதரா மைதானத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "2001ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அது உங்கள் நினைவில் இருக்கலாம். நம் அணி பல பின்னடைவுகளை அப்போட்டியில் சந்தித்தது.
ஆனால், ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோர் போட்டியை தலைகீழாக மாற்றினர். இது நேர்மறை சிந்தனை, முயற்சி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவிலேயே அருணாச்சலப் பிரதேசத்தில்தான் மக்கள் 'ஜெய் ஹிந்த்' என முழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர். இது அரிதாக நடப்பவை. நீங்கள் அனைவரும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம்செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சந்திரயான் 2 ஏவப்படும்போது ஏன் பங்கேற்பு? - பிரதமர் மோடி விளக்கம்