குழந்தைகள், கரோனா வைரஸ் நோயின் அறிகுறிகளிலிருந்து தப்பித்தபோதிலும் அதனால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உரிமைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் அனைத்து வயதுடைய குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சில குழந்தைகள் பெரிய விலை கொடுக்கவேண்டியதாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கூறுகையில், "சேரி, அகதிகள் முகாம், தடை செய்யப்பட்ட பகுதி ஆகியவற்றில் வாழும் குழந்தைகள் கடுமையான விளைவுகளை சந்தித்துவருகின்றனர். மாற்றுத் திறனாளிகளும் இதிலிருந்து தப்பவில்லை. உலகில் வாழும் குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பெற்றோர்கள், தலைவர்கள் ஆகியோர் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். ஊரடங்கால் குடும்பங்களில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வருமானம் குறைவதன் மூலம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பொருள்கள் வாங்குவதை குடும்ப உறுப்பினர்கள் குறைத்துள்ளனர். இதனால், குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயால், உலகப் பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்துள்ளது. 2020இல் இதனால் பல குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்