மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறையினரிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ஷர்ஷ் வர்தன், ”கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல நன்மைகள் நடந்துள்ளன. ஏனெனில் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்நாட்டில் நாம் அதிகளவில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்கிறோம்.
நூற்றுக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் 1.5 லட்சம் வரை பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்கிறோம்.
புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு குறித்து இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பிற்காக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 16 மாநிலங்களில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு கரோனா இரட்டிப்பாகும் நிலைமை மூன்று தினங்களாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த 14 நாள்களில் 8.2 வீதமாகவும் கடந்த ஏழு நாள்களில் 10.2 வீதமாகவும், கடந்த மூன்று தினங்களிங்ல் 10.9 ஆக குறைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்” என்றார்.
பின்னர் உயிரி தொழில்நுட்பத் துறையின் முயற்சிகளைப் பாராட்டிய ஹர்ஷ் வர்தன், ஆராய்ச்சிகள், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பல நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: 80 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்