சூரத் பகுதிக்கு ஒரு துக்க நிகழ்வுக்கு காரில் சென்ற இரண்டு சாதுக்குள் உட்பட மூன்று பேரை திருடர்கள் எனக் கருதி, சில நாட்களுக்கு முன்பு பல்கர் பகுதி மக்கள் அடித்துக்கொலை செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயர்மட்ட விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா என்றும்; இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்தச்சூழ்நிலையில், யாருடையை பெயரையும் குறிப்பிடமால், இது அரசியல் சண்டை போடுவதற்கான நேரம் அல்ல. தற்போது ஒன்று சேர்ந்து கரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.
"பல்கர் சம்பவம் நடந்திருக்கக்கூடாது, அந்தச் சம்பவம் கண்டிக்கத்தக்கதே. அச்சம்பவம் மக்களிடையே பரப்பப்பட்ட வதந்தியாலும், தவறான புரிதலாலும் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோரை அரசாங்கம் கைது செய்துள்ளது" என சரத் பவார் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
மேலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறையாமால் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் ஊடகங்கள் பல்கர் கொலையைப் பற்றி அதிகம் பேசாமல் கரோனா பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசுங்கள் என்றும் சரத் பவார், அந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பல்கர் வன்முறைச் சம்பவத்தை அரசியலாக்கும் பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு