ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம், அங்கு அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. மதியம் சுமார் 12:45 மணிக்கு தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கில் எல்லைப் பாதுகாப்புப் படை பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுத்துவருகிறது.
உயிரிழப்பு குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. இருநாட்டு ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருவதால், பாதுகாப்பு நலன் கருதி எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் பதுங்கு குழிக்குள் இறங்கி, இரவு முழுவதும் நேரத்தைக் கழித்தனர்.
கடந்த ஒரு வார காலமாகவே, சீன - இந்திய நாடுகளுக்கிடையே எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. இந்திய தக்க பதிலடி கொடுத்தாலும், பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. கரோனா தாக்கம் ஒரு முனையில் இருக்க, போர் பதற்றம் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.