ராணுவத் தளபதி முகுந்த் நரவனே ராணுவ தினம் கொண்டாட்டங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அதில், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சந்திக்கவுள்ள சிக்கல்கள் குறித்து பேசினார். அதில், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் ஊக்குவிக்கின்றது. இந்தியா ஒருபோதும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அடிபணியாது. எந்தவொரு சவாலுக்கும் முறையான பதில் தர தயாராகவுள்ளோம் என்றார்.
கோவிட்-19 காலத்தில் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா எதிர்பாராத அழுத்தம் தந்தாலும் அதை சிறப்பாக இந்திய படைகள் கையாண்டன. இந்தியா அமைதியை விரும்பினாலும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை அச்சுறுத்த நினைக்கின்றன. இருப்பினும் முழு பலத்துடன் எதையும் சந்திக்க தயாராகவுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: கோவிட்-19: இந்தியாவில் ஏழு மாதங்களில் இல்லாதளவிற்கு குறைவான பாதிப்பு