ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்து இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இன்று மதியம் 1.45 மணியளவில் கிர்னி எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவம் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுத்ததாகவும், சிறிது நேரத்திற்கு இந்தத் தாக்குதல் சம்பவம் இரு தரப்பிலும் தொடர்ந்ததாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, காயம் ஏதும் ஏற்படாமல் தப்பித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:காஷ்மீரில் மூன்று பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை