ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தர் செக்டர் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை 9 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் உயிரிழப்போ, படுகாயமோ எற்படவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்துவது கண்டத்துக்குறியது என்றார்.