பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது காலை 7.45 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள மான்கோட் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் நடந்தது.
இதனை உறுதி செய்துள்ள இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தாக்குதலுக்கு இந்திய ராணுவத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டவருவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் (திங்கட்கிழமை) யுத்த நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி மான்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. சுந்தர்பானி-நவ்ஷெரா பகுதியில் நடந்த தாக்குதலில் ஆறு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 23ஆம் தேதிவரை மொத்தம் 646 யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊடுருவிய பயங்கரவாதிகள்: துப்பாக்கிச்சூட்டில் இருதரப்பிலும் ஐந்து பேர் உயிரிழப்பு
!