ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு உரிமை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, எல்லைப் பகுதியில் பதற்றத்தை தக்க வைக்கும் வகையில் ராணுவப் படைவீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியான டெக்வார் பகுதியில் காலை 8:40 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சுடு நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பு வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த 9ஆம் தேதி டெக்வார் பகுதியில் போர்நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், இரண்டு நாள்களுக்கு முன்னர் பூஞ்சின் கிர்னி, கஸ்பா மற்றும் ஷாப்பூர் பகுதிகளிலும் இதே போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : கட்டுமானத்துறையில் ஊழல்: 72 சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை