ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் உள்ள சந்தண்டா ஹிராநகர் பகுதி, இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் டிச.24ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறிய ரக மோட்டார் ரக துப்பாக்கிக்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய வீரா்கள் பதிலுக்கு தாக்க தொடங்கியதால், பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. பொதுமக்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் அத்துமீறல்: பாகிஸ்தானைச் சேர்ந்த 2 வீரர்களை சுட்டுவீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை!