ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அத்துமீறி இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக கூறப்படுகிறது..
இதன் தொடர்ச்சியாக, ஜம்மு-காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் உள்ள கிரிஷ்ண ஹாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தியப் படையினர் மீது இன்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு இந்தியப் படையினரும் அவர்களை தாக்கியிருக்கிறார்கள்.