ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்நதெடுக்கப்பட்டவர்களில், நடிகர் கதர் கான் (லேட்), அகைல் தால் தலைவர் சுக்தேவ் சிங் திந்த்சா, புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நாயர் (லேட்) ஆகியோர் ஆவர்.
நடிகர் கதர் கானுக்கு உயரிய பத்ம ஸ்ரீ விருதும், சுக்தேவ் சிங் திந்த்சா, குல்தீப் நாயர் (லேட்) ஆகியோருக்கு உயரிய பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
#WATCH President Ram Nath Kovind confers Padma Shri award upon director and actor Prabhu Deva for the field of Art - Dance. #PadmaAwards pic.twitter.com/3wMttMuxIx
— ANI (@ANI) March 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH President Ram Nath Kovind confers Padma Shri award upon director and actor Prabhu Deva for the field of Art - Dance. #PadmaAwards pic.twitter.com/3wMttMuxIx
— ANI (@ANI) March 11, 2019#WATCH President Ram Nath Kovind confers Padma Shri award upon director and actor Prabhu Deva for the field of Art - Dance. #PadmaAwards pic.twitter.com/3wMttMuxIx
— ANI (@ANI) March 11, 2019
இதில் மகாராஷ்டிரா பாபாசாஹேப் புர்னேந்தர் என்கிற பல்வான்ட் மொரேஹ்வர் புர்னேந்தர்(பத்ம பூஷண்), பீகார் தலைவர் ஹீகுமதேவ் நாராயண் யாதவ்(பத்ம பூஷண்), பன்னாட்டு நிறுவனமான சிஸ்கோ அமைப்புகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சேம்பர்ஸ், புகழ்பெற்ற நடன இயக்குனர் பிரபு தேவா (பத்ம ஸ்ரீ)ஆகியோருக்கு விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
மலையாள நடிகா் மோகன்லால், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 14 நபா்களுக்கு பத்ம பூஷண் விருதுகளும்,பின்னணி பாடகரான சங்கா் மகாதேவன், சமூக சேவகி மதுரை சின்னபிள்ளை, மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா், பரதநாட்டிய கலைஞா் நா்த்தகி நடராஜ், மருத்துவா் ரமணி, மருத்துவா் ராமசாமி வெங்கடசாமி, , டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் கவுதம் கம்பீா் உள்ளிட்ட 94 நபா்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மலையாள நடிகர் மோகன்லால்(பத்ம பூஷண்), சுக்தேவ் சிங் திந்த்சா(பத்ம பூஷண்), நடன இயக்குனர் பிரபு தேவா(பத்ம ஸ்ரீ), வெளிநாட்டு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்(பத்ம ஸ்ரீ), டென்னிஸ் வீராங்கணை சரத் கமல் மற்றும் சாம்பியன் ஹரிகா துரோணவல்லி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
அவர்களைத் தொடர்ந்து, பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் (பத்ம ஸ்ரீ), மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா (பத்ம ஸ்ரீ), டிரம்ஸ் ஆனந்தன் சிவமணி(பத்ம ஸ்ரீ), இந்திய கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர்(பத்ம ஸ்ரீ), புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நாயர்(பத்ம பூஷண்), ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன.