இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷா கயாண்டே செய்தியாளர் சந்திப்பில், “கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்று பாதிப்பால் மகாராஷ்டிரா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்புத் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரத்தில் அவர் சரக்கு மற்றும் சேவை வரி குறித்தும் பேசியிருக்க வேண்டும்.
மகாராஷ்டிரா போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக பங்கு கொடுக்கப்பட வேண்டும். மும்பை நாட்டின் நிதி மூலதன பெருநகரமாகத் திகழ்கிறது. ஆகவே மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு அதிக நிதி கொடுப்பார்கள், அதேபோல் மாநிலத்திற்கான ஜிஎஸ்டி பங்கையும் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், மாநிலத்தின் அமைச்சருமான நவாப் மாலிக், "2015ஆம் ஆண்டு பிகார் மாநிலத்துக்கு அறிவித்ததுபோல் இது இருக்கக் கூடாது.
அந்த வகையில் இது எவ்வாறு வருகிறதென்று பார்ப்போம். மேலும் இது உண்மையான திட்டமாக இருக்க வேண்டும். மாறாக ஒரு கட்டணம் போன்று அமைந்துவிடக் கூடாது” என்றார்.
நாட்டிலேயே கரோனா தீநுண்மி அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 24 ஆயிரத்து 427 பேர் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 941 ஆக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: தெலங்கானாவில் இருவர் உயிரிழப்பு