ETV Bharat / bharat

'உபயோகத்தில் இல்லாத 40 விழுக்காடு கழிவறைகள்' - ப. சிதம்பரம் தாக்கு

டெல்லி: அரசுப் பள்ளிகளில் 40 விழுக்காடு கழிவறைகள் உபயோகத்தில் இல்லாதபோது, நாட்டில் பொது இடத்தில் மலம் கழிப்பது முற்றாக இல்லையென அரசு எவ்வாறு அறிவிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

chif
chif
author img

By

Published : Sep 24, 2020, 3:29 PM IST

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சிஏஜி (Comptroller and Auditor General) அறிக்கையின்படி, 2326 கழிப்பறைகளில் ஆய்வுமேற்கொண்டதில், 1812 கழிப்பறை தண்ணீர் வசதி இல்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக அந்த 1812 கழிப்பறைகளில் 715 கழிவறைகள் சுத்தம் செய்யப்படவும் இல்லை. நாட்டின் முக்கியமான 15 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 75 விழுக்காடு அரசுப் பள்ளிகளில் கழிவறைகளில் முறையான சுகாதாரம், சோப்பு, நீர் வசதி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிஏஜி அறிக்கையை ப. சிதம்பரம் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "40 விழுக்காட்டிற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. முன்னதாக, தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகள் குறித்து இதேபோன்ற தகவல்கள் வந்தன.

​​40 விழுக்காடு கழிவறைகள் உபயோகத்தில் இல்லாதபோது, நாட்டில் பொது இடத்தில் மலம் கழிப்பது முற்றாக இல்லையென அரசு எவ்வாறு அறிவிக்க முடியும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.