ETV Bharat / bharat

அரசு உயர் பதவியை உதறி, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ஆக்ஸ்போர்டு மாணவர் - மாற்றத்தின் மீது நம்பிக்கை

வரப்போகும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மனிஷ் பாரியார் களமிறங்குகிறார்.

Oxford alumnus
Oxford alumnus
author img

By

Published : Oct 15, 2020, 1:43 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறகிறது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தள - பாஜக கூட்டணி ஒருபுறமும், ராஷ்டிரிய ஜனதா தள -காங்கிரஸ் கூட்டணி மறுபுறமும் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் அம்மாநிலத்தின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளாரக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான மனிஷ் பாரியார் களமிறங்குகிறார்.

மனிஷ் கடந்துவந்த பாதை...

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தலைமை பண்பு குறித்த பாடத்தில் பட்டம் பெற்ற இவர், வர்த்தக அமைச்சகத்தில் உயர் அலுவலர் பொறுப்பில் இருந்துள்ளார். தனது பணியில் திருப்தி கிடைக்காத காரணத்தால், சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் மக்கள் சேவையில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் அரசியலில் நேரடியாகக் களமிறங்கியுள்ளார், மனிஷ்.

மாற்றத்தின் மீது நம்பிக்கை:

வேட்பாளாரக களம்கண்ட பின்னர் அவர் கூறுகையில், 'நான் வாக்கு வங்கி அரசியலுக்காக போட்டியிடவில்லை. பாங்கிபூரில் பிறந்த நான் இந்த மக்களின் நலனுக்காக இங்கு சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறேன். பலரும் தற்போது பணத்தை நோக்கமாகக் கொண்டே அரசியலுக்கு வருகின்றனர்.

கல்லூரி காலங்களிலேயே மாணவர் சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள நான், சமூக சேவை என்ற அடிப்படையில் தேர்தலைச் சந்திக்கிறேன். பிகார் மக்கள் தங்களுக்கான வளர்ச்சியை இன்னும் பெறவில்லை. மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதால், நல்லதொரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஞானபீட விருதுபெற்ற மலையாள கவிஞர் அகிதம் அச்சுதன் நம்பூதிரி காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.