புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கைலாசநாதர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் அதே பகுதியில் நடராஜா என்ற பெயரில் ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவருக்கும், எதிர் வீட்டிலிருக்கும் முகமது ரியாஸ் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் மோகனுக்கும், முகமதுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது மோகன், மோகனின் மனைவி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும், முகமது ரியாஸ் அவரது மனைவி பதுர்நிஷா மற்றும் முகமது ரியாசிடம் பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளி ராம் தீபக் ஆகிய மூவரும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கீழே விழுந்து தலையில் அடிபட்ட மோகன், அவரது மனைவி கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்கால் காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, முகமது ரியாஸ், பதுர் நிஷா, மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ராம் தீபோர் ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் காரைக்கால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை: 'விவசாயிகள், விதை உற்பத்தித் துறைக்கு மாற்று வழி ஏற்படுத்தித் தரவேண்டும்'