ETV Bharat / bharat

'மக்களாட்சியைக் கேள்விக்குறியாக்கும் முப்படைத் தலைமைத் தளபதி' - ஓவைசி விமர்சனம் - மக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் முப்படை தலைமை தளபதி

ஹைதராபாத்: அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.

Owaisi
Owaisi
author img

By

Published : Jan 17, 2020, 1:46 PM IST

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தை விமர்சித்து ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், "கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களையும் அவர்களை தூண்டிவிடும் அரசியல் தலைவர்களையும் யார் மீட்கப்போவது? அஸ்ஸாமைச் சேர்ந்த வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பவர்களுக்கு யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்? தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவற்றை திணிப்பவர்களுக்கு நாம் வகுப்பு எடுக்க வேண்டும்.

ஒவைசி

இது முப்படைத் தலைமைத் தளபதியின் முதல் கருத்தல்ல. திட்டம் குறித்து அரசு நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும். ராணுவம் அல்ல. அரசு திட்டங்கள் குறித்து அவர் பேசியிருப்பது மக்களாட்சியைக் கேள்விக்குறியாக்குகிறது" என்றார்.

இதையும் படிங்க: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு

Intro:Body:

b

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.