ETV Bharat / bharat

'ஓவர் வேகம்' 4 மாணவர்கள் உட்பட 6 பேரை தூக்கி வீசிய கார்- பதறவைக்கும் சிசிடிவி! - alapuzhaa car crash bicycle and bike near poochakal

ஆலப்புழா: சாலையில் நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் நேராக மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆலப்புழா
ஆலப்புழா
author img

By

Published : Mar 11, 2020, 6:41 PM IST

கேரளாவில் பூச்சக்கல் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் சாலையில் செல்லும் மாணவர்கள் மீது மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில், முதலில் சாலையில் நடந்து செல்லும் மூன்று பள்ளி மாணவிகள் மீது கார் நேராக மோதியதில் மாணவிகள் தூக்கி வீசப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து, அதே வேகத்தில் பாய்ந்த கார் எதிர் திசையில் சைக்கிளில் வந்த மாணவரையும் இடித்து தள்ளிவிட்டு நேராக மின்கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் அனகா, அர்ச்சனா, சந்தனா, சாகி ஆகிய நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அதே கார், இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் அருகே வடமாநில இளைஞர் கொலை - கொலையாளிகளுக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.