ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் கரோனா நோயாளியிடம் ரூ.18 லட்சம் வசூல்! - ஹைதராபாத்தில் உள்ள  தனியார் மருத்துவமனை

ஹைதராபாத்: மூச்சுத்திணறல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளியிடமிருந்து சிகிச்சை தொகையாக 18 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கரோனா நோயாளியிடம் ரூ.18 லட்சம் வசூல்!

author img

By

Published : Jul 29, 2020, 2:38 AM IST

ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை ஐசியு பிரிவுக்கு மாற்றி, சிகிச்சை அளித்தனர். 14 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் குணமடைந்து வீடு திரும்பும் போது, மருத்துவ நிர்வாகம் சிசிச்சை தொகையாக அவரிடம், 18 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயைக் கோரியது.

அவர் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்த நிலையில், மீதமுள்ள தொகையைச் செலுத்திய பின்னரே அவர் வெளியேற்றப்படுவார் என்று மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் தொகையைச் செலுத்துவதற்காகப் பணம் திரட்டிவருகின்றனர்.

தனியார் மருத்துவனைகளுக்குச் செல்லும் பல நோயாளிகளுக்கு தனியார் காப்பீடு இருந்தாலும், பெருநிறுவன மருத்துவமனைகளில் சேர்க்கை நேரத்தில், பணம் செலுத்திய பிறகே, அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில், மோசமான விஷயம் என்னவென்றால், அதிகளவிலான பணத்தைச் செலுத்திய பிறகும், நோயாளி உயிர் பிழைக்காவிட்டால், மீதமுள்ள தொகையைச் செலுத்தும்போதுதான் இறந்தவரின் சடலம்கூட ஒப்படைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், கரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக '91541-70960' என்ற வாட்ஸ்அப் எண்ணை தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதில், முதல் 11 நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக இருப்பதாக மாநில அரசு அறிவித்தாலும், கரோனாவால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர் கூட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் சில மருத்துவமனைகள் செயற்கையாகப் படுக்கைகள் பற்றாக்குறையை உருவாக்கிவருவதாகவும் கூறப்படுகிறது. சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே குறைந்தது ஒரு லட்சம் வரை வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசாங்கம் என்ன அறிவித்துள்ளது?

தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டணங்களை தெலங்கானா அரசு மூன்று அடுக்குகளாக வகைப்படுத்தியுள்ளது - தனிமைப்படுத்தல் (ஒரு நாளைக்கு 4,000 ரூபாய்), ஐசியு (7,500 ரூபாய்), ஐசியு வித் வென்டிலேட்டர் (9,000 ரூபாய்)

  • ரத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், ஈ.சி.ஜி., 2 டி எதிரொலி, எக்ஸ்ரே, ஹெச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி, சி போன்றவை மற்றும் சில சாதாரண மருந்துகளின் விலைகளையும் மேற்கூறியவற்றில் அரசு சேர்த்துள்ளது.
  • இருப்பினும், சில விலையுயர்ந்த மருந்துகள், விலையுயர்ந்த நோய் கண்டறிதல் சோதனைகள், பிபிஇ கருவிகள் மற்றும் என் 95 முகக்கவசங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் சோதனைகளுக்கான கட்டணம் 2,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் கவனத்துக்கு வந்த புகார்கள்:

ஹைதராபாத்தின் ஈ.சி.ஐ.எல். பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நோயாளிடம் சேர்வதற்கு முன் ஒரு லட்சம் ரூபாய் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர், நோயாளி உயிரிழந்தார். உடலை ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் 4 லட்சம் ரூபாய் கோரியது. உடலை வாங்க உறவினர்கள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டியிருந்தது. இதில், கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் மருத்துவத் துறை அலுவலர்கள் கூற்றுப்படி, இந்த மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதி இல்லை.

சிறுநீரகப் பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொண்டிருந்த ஹைதராபாத்தின் குல்கட்பள்ளியில் உள்ள ஒருவர், கரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவரை நள்ளிரவில் அனுமதிக்க வேண்டியிருந்தது. அவர் குணமடைந்ததால், மறுநாள் காலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு ஒரு மாத்திரையோ அல்லது ஊசியோ போடப்படவில்லை. மருத்துவமனையில் ஆறு மணி நேரம் தங்கியதற்காக, அவரிடமிருந்து 80,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நோயாளியின் மருத்துவக் கட்டணத்தில், பிபிஇ கிட்டுக்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய், எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு 24,000 ரூபாய் போன்ற கட்டணங்கள் இருந்தன. மொத்த மருந்துவச் செலவு 18 லட்சம் ரூபாய் வரை சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவரின் கட்டணம் 2.32 லட்சம் ரூபாய், மருந்து கட்டணமாக 5.23 லட்சம் ரூபாய் ஆகியவையும் அடங்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.