பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடையே பேசிய லெப்டினெண்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், ”மத்திய ரிசர்வ் படை காவல்துறையினர், (சிஆர்பிஎஃப்), ஜம்மு காஷ்மிர் மாநில அரசாங்கத்தின் காவல்துறை, இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புபடைகள் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றன.
இதன் காரணமாக பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பயங்கரவாத தலைமைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பள்ளத்தாக்கில் அமைதி நிலவி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் அதை சீர்குலைக்கும் வகையில், அதிகமான பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்கின்றது. இந்த ஊடுருவலை ஆதரிப்பதற்காக, பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த விதிமீறல்களைச் செய்துவருகிறதாக” தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:டெல்லி வன்முறை கட்டுக்குள் வந்தது - தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்