கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் குடகு, தக்ஷிணா கனடா, உடுப்பி, விஜயபூரா, பெலகவி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தினால் நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. மேலும் குடகு, தக்ஷிண கனடா, உடுப்பி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.