ஜம்மு காஷ்மீரில் வேரூன்றியுள்ள பயங்கரவாதக் குழுக்களை தற்போது இந்திய ராணுவம் கட்டுப்படுத்திவருகிறது. பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகள் தற்போது கையாளப்படுகின்றன. கரோனா லாக்டவுன் பொதுமுடக்கம் மூன்று மாதத்திற்கும் மேலாக அமலில் உள்ளது ராணுவ நடவடிக்கைக்கு மேலும் வலுவூட்டக் கூடியதாக உள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீரின் தலைமை காவலர் விஜய் குமார் செய்தியாளர்களிடம் விரிவான விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதில், வடக்கு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் செயலில் ராணுவம் தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் காவல்துறையும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுன்டரில் மட்டும் 94 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் அஜய் பண்டிட் என்ற உள்ளாட்சிப் பிரதிநிதி ஹிஸ்புல் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான பின்புலத்தை தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவும், விரைவில் பயங்கரவாதிகள் பிடிபடுவார்கள் என நம்புவதாகவும் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ விவகாரம்: முன்னாள் முதலமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு!