கடந்த 2019ஆம் ஆண்டு, உலகிலேயே இந்தியாவில்தான் அதிகப்படியான எண்ணிக்கையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர் சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இயற்கைப் பேரிடர், மோதல், வன்முறை ஆகியவற்றின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாகவும், அதில் இயற்கைப் பேரிடர் காரணமாக 25 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மோதல், வன்முறை காரணமாக 8.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வன்முறையைக் காட்டிலும் அதிக அளவிலான இடம்பெயர் சம்பவங்கள் நடைபெற்றதற்குக் காரணம் இயற்கைப் பேரிடர் என இதன்மூலம் தெரியவந்துள்ளது. கிழக்காசிய மற்றும் பசிபிக் பகுதியில் மட்டும் 10 மில்லியன் அதாவது 39 விழுக்காடு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தெற்காசியாவில் 9.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர் சம்பவங்களில் 69 விழுக்காடு இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மரியாதை