ETV Bharat / bharat

வந்தே பாரத் திட்டம் மூலம் 20 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் - வந்தே பாரத் விமானப் போக்குவரத்து சேவைத் திட்டம்

வந்தே பாரத் விமானப் போக்குவரத்து சேவைத் திட்டம் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vande Bharat
Vande Bharat
author img

By

Published : Oct 30, 2020, 5:26 PM IST

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ”இதுவரை வந்தே பாரத் விமான சேவைத் திட்டம் மூலம் சுமார் 20.55 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்தத் திட்டம் தற்போது ஏழாவது கட்டத்தில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும், 1,057 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் மட்டும் 24 நாடுகளிலிருந்து சுமார் 1.95 லட்சம் இந்தியர்கள் நாடு கொண்டவரப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும், 18 நாடுகளுடன் "ஏர் பப்புல்" ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விமானப் போக்குவரத்து சேவையின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சவுதி அரேபியா கரன்சி நோட்டால் சர்ச்சை: இந்தியா எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.