ETV Bharat / bharat

நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு - சுகாதாரத்துறை தகவல் - இந்தியாவில் கரோனா பாதிப்பு

டெல்லி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளொன்றுக்கு ஒரு லட்சதிற்கும் மேற்பட்ட முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Health Ministry
Health Ministry
author img

By

Published : Apr 25, 2020, 6:15 PM IST

Updated : Apr 25, 2020, 8:06 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் கரோனா தடுப்பு பணிகள், இந்தியாவின் தற்போதைய நோய் பாதிப்பு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்குப்பின் சுகதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 3.1 விழுக்காடாக உள்ள நிலையில், நோய் தொற்றில் குணமடைபவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு இருமடங்காகும் எண்ணிக்கை சராசரியாக 9.1 நாள்களாக உள்ளது.

நாடு முழுவதும் பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடின்றி தேவையான அளவிற்கு கிடைக்கும் வகையில் தினம்தோறும் ஒரு லட்சம் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், 59 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கவும் ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: லண்டன் டு கேரளா: வாட்ஸ் அப் குழுவால் வந்த ஐடி ஊழியர்

Last Updated : Apr 25, 2020, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.